சினிமா

வாவ்.. கொள்ளை அழகில் வேற லெவலில் இருக்காரே! சினிமாவில் ஹீரோயினாகும் தெய்வமகள் அண்ணியார் மகள்!

Summary:

வாவ்.. கொள்ளை அழகில் வேற லெவலில் இருக்காரே! சினிமாவில் ஹீரோயினாகும் தெய்வமகள் அண்ணியார் மகள்!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல சீரியல்கள் இன்றும் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது. அவ்வாறு சன் டிவியில் சுமார் மூன்று ஆண்டுகள் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் தெய்வமகள். இந்த தொடரில் ஹீரோவின் அண்ணியாக, மிரட்டலான வில்லியாக ரேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பரிச்சயமானவர் ரேகா கிருஷ்ணப்பா.  இந்தத் தொடரில் அவரது நடிப்பு பலரையும் மிரள வைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து ஒரு சில தொடர்களில் வில்லத்தனமாக நடித்து பலரையும் அசர வைத்த அவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் என்ற தொடரில் நடித்து வருகிறார். இவரது கணவர் வசந்த் குமார். இவருக்கு பூஜா என்ற நன்கு வளர்ந்த மகள் உள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அண்ணியார் ரேகா தற்போது சந்தோஷமாக புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அவரது மகள் பெரிய திரையில் அறிமுகமாகவிருக்கிறார் எனவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.


Advertisement