தீரன் அதிகாரம் இரண்டு படத்தின் முக்கிய அப்டேட்; அசத்தல் தகவல் இதோ.!Theeran Adhigaaram Irandu Movie Update 

 

கடந்த 2017ம் ஆண்டு எச்.வினோத் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில், நடிகர்கள் கார்த்திக், ரகுல் ப்ரீத் சிங், போஸ் வெங்கட், மனோபாலா, ஆர்.என்.ஆர் மனோகர், சத்யன், அம்மு அபிராமி உட்பட பலர் நடிக்க வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தீரன் அதிகாரம் ஒன்று (Theeran Adhigaaram Ondru). 

இப்படம் கடந்த காலத்தில் நடந்த கொள்ளை சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு நல்ல வரவேற்பை அடைந்தது. அதனைத்தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாவது பாகம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்து வந்தது. இதனிடையே, நடிகர் கார்த்திக் கைதி 2 படத்தில் நடிக்கவுள்ளார். 

இதையும் படிங்க: Surya 44: சூர்யா 44 படத்தில் இணைந்த பூஜா ஹெட்ஜ், ஜெயராம், கருணாகரன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

அதேபோல, எச்.வினோத்தும் தளபதி 69 படத்தில் பணியாற்றவிருக்கிறார். இதனால் கைதி திரைப்படத்தின் படப்பிடிப்பு 2026ல் மே - ஜூன் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் வெற்றியைப்போல, அதன் இரண்டாவது (Theeran Adhigaaram Irandu) பாகமும் வலுவான கதையம்சத்துடன் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: வெறித்தனமாக மிரட்டும் டிரெய்லர் விரைவில்.. தங்கலான் படத்தின் முக்கிய அப்டேட்; ஜிவி பிரகாஷ் அசத்தல் தகவல்.!