பொன்னியின் செல்வன்-2 படத்திற்கு சிறப்பு காட்சிகள் இல்லை…!! திரையரங்க உரிமையாளர் சங்கம் அறிவிப்பு..!!

பொன்னியின் செல்வன்-2 படத்திற்கு சிறப்பு காட்சிகள் இல்லை…!! திரையரங்க உரிமையாளர் சங்கம் அறிவிப்பு..!!


The Theater Owners Association has announced that there will be no special screenings for Ponni's Selvan-2

பொன்னியின் செல்வன்-2 படத்திற்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்போவது இல்லை என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல சீனியர் இயக்குனர் மணிரத்னம். இவர் மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்று புதினத்தை தழுவி அதே பெயரில் 2 பாகங்களாக திரைப்படம் இயக்கி உள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதுடன் வசூலில் சாதனையும் படைத்தது.

இந்த நிலையில், நாளை மணிரத்னம் இயக்கிய  'பொன்னியின் செல்வன்-2' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதன் காரணமாக  பொன்னியின் செல்வன் 2 ஆம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, முதல் நாள் சிறப்பு காட்சிகளின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தவிர்க்கும் வகையில், பொன்னியின் செல்வன்-2 படத்திற்கு நள்ளிரவு மற்றும் அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்போவது இல்லை என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், நாளை காலை 9 மணிக்கு 'பொன்னியின் செல்வன்-2' படத்தின் முதல் காட்சி திரையிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.