ஊரடங்கால் தவித்த மக்களுக்காக நம்ம குக் வித் கோமாளி தர்ஷா குப்தா செய்த காரியத்தை பார்த்தீர்களா! தலைவி வேறலெவல்தான்!!

ஊரடங்கால் தவித்த மக்களுக்காக நம்ம குக் வித் கோமாளி தர்ஷா குப்தா செய்த காரியத்தை பார்த்தீர்களா! தலைவி வேறலெவல்தான்!!


tharsha-gupta-help-poor-people-who-affected-by-lockdown

தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து மருத்துவமனைகளில் நிரம்பி வழிகின்றனர். இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுபடுத்த மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் தற்போது தமிழகம் முழுவதும் எந்த தளர்வும் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் யாரும் உணவின்றி தவிக்க கூடாது என்பதற்காக பல பிரபலங்களும். தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல பகுதிகளில் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான நடிகையான தர்ஷா குப்தாவும் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

அதாவது அவர் ராயபுரம் பகுதியில் வருமானமின்றி தவிக்கும் மீனவ குடும்பத்தினருக்கு  உணவு பொருட்கள் வழங்கி உதவியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்த அவர் சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள வருமானமின்றி தவிக்கும் மீனவ குடும்பத்தினருக்கு என்னால் முடிந்த உதவி செய்தேன். நீங்களும் இல்லாதவர்களுக்கு உதவுங்கள் உங்கள் சந்ததி வாழும் என பதிவிட்டுள்ளார்.