சினிமா

எனது மகனுக்கு நடிகை யாஷிகாவுடன் காதலா? தீயாய் பரவும் புகைப்படம்! உண்மையைப் போட்டுடைத்த நடிகர் தம்பி ராமையா!

Summary:

Thampi ramaiah talk about yashika love with his son

தமிழில் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.  இதைத்தொடர்ந்து அவர் கவுதம் கார்த்தி நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 பின்னர் அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மேலும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வரத் துவங்கியது.

இந்நிலையில் சமீபகாலமாக நடிகை யாஷிகாவும், நடிகரும் இயக்குனருமான தம்பிராமையாவின் மகன் உமாபதியும் நெருக்கமாக இருக்குமாறு சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அதனைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் தகவல்கள் பரவி வந்தது.

இந்நிலையில் உமாபதியின் தந்தையான நடிகர் தம்பி ராமையா இதுகுறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் தான் சிறுத்தை சிவா என்ற படத்தி இயக்கி வருவதாகவும் அதில் தனது மகன் உமாபதி  ஹீரோவாக நடிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் அதில் யாஷிகா கதாநாயகியாக நடிக்கிறார் இந்நிலையில் பாடல் ஒன்றிற்கு புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் என் மகனுக்கு மலேசியாவில் பெண் பார்த்து வருகிறோம். தயவுசெய்து இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என கூறியுள்ளார்.


Advertisement