புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
பிக்பாஸில் இருந்து வெளியேறிய தாமரை எப்படி வீட்டிற்கு சென்றுள்ளார் பார்த்தீங்களா! தீயாய் பரவும் புகைப்படம்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் பிக்பாஸ் சீசன் 5 மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் 18 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டவர் தாமரைசெல்வி. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அவர் மேடை நாடகக் கலைஞர் ஆவார்.
கிராமத்தில் இருந்து வந்த தாமரை பிக்பாஸ் வீட்டில் கொடுக்கபட்ட அனைத்து டாஸ்க்குகளையும் மிகவும் சிறப்பாக விளையாடி, கடுமையான போட்டியாளர்களில் ஒருவராக இருந்து வந்தார். சண்டை, வாக்குவாதங்கள், அன்பு என பிக்பாஸ் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு சென்ற அவர் நிகழ்ச்சியின் இறுதிவரை செல்வார் என எதிர்பார்த்திருந்த நிலையில் நேற்று குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிக்பாஸ் வீட்டில் இருந்து தாமரை வெளியேறிய காட்சிகள் நேற்றைய எபிசோடில் ஒளிபரப்பானது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தாமரை செல்வி தனது பேக்குடன் ஆட்டோவில் புறப்பட்டு வீட்டிற்கு சென்றதாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பெருமளவில் வைரலாகி வருகிறது.