அவ பெரிய.... பாவனியை விமர்சித்த தாமரை! விளாசி தள்ளும் நெட்டிசன்கள்! குறும்படம் இதோ!!

அவ பெரிய.... பாவனியை விமர்சித்த தாமரை! விளாசி தள்ளும் நெட்டிசன்கள்! குறும்படம் இதோ!!


Thamarai teased pavani video viral

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் சென்று கொண்டுள்ளது. இதில் 18 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர் அவர்களைத் தொடர்ந்து வைல்டு கார்டு என்ட்ரியில் சில போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர்.

இந்த நிலையில் நேற்று அபினய் குறைந்த வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இதில் போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் தாமரை. ஆரம்பத்தில் வெகுளியாக இருந்த அவர் பின்னர் தற்போது சிறப்பாக கேம் விளையாடி வருகிறார். இவர் போட்டியாளர்கள் பலரிடமும் சண்டை போட்டுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன் பாவனி மற்றும் அபினய் விவகாரம் பேசுபொருளாக இருந்தது. ஆனால் கமல் இதுகுறித்து கேட்டு பஞ்சாயத்து செய்து வைத்த நிலையில் இருவரும் அவரவர் வேலைகளை பார்த்தனர். இந்நிலையில் தற்போது பாவனி அமீர் நெருங்கி பழகி வருகின்றனர்.

இதற்கிடையில் அபினய் மற்றும் அக்ஷராவிடம் பேசிய தாமரை, பாவனி என்ன அவ்ளோ பெரிய பேரழகியா என கேட்டுள்ளார். உடனே அக்ஷரா இப்டிலாம் பேசாதக்கா.. பிரச்சினை வரும் என்று கூறுகிறார். இந்த குறும்படத்தை பகிர்ந்து பாவனி ரசிகர்கள் தாமரையை விளாசி வருகின்றனர். இதற்கு முன்பு ஏற்கனவே தாமரை பாயாசம் செய்து அனைத்து போட்டியாளர்களுக்கும் கொடுத்துவிட்டு பாவனிக்கு மட்டும் கொடுக்கவில்லை. இது பலரையும் கடுப்பாக்கியது குறிப்பிடத்தக்கது.