செம்ம மனசு சார் உங்களுக்கு! தாமரை போட்டுடைத்த உண்மை! ஹீரோவான கணவர் பார்த்தசாரதி!! வைரல் வீடியோ!!

செம்ம மனசு சார் உங்களுக்கு! தாமரை போட்டுடைத்த உண்மை! ஹீரோவான கணவர் பார்த்தசாரதி!! வைரல் வீடியோ!!


thamarai-talk-about-her-husband-parthasarathy

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நாடக கலைஞர் தாமரை. இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்களும் உருவாகினர். அதனைத் தொடர்ந்து தாமரை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்த நிலையில் தாமரை தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் தாமரைக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அப்பொழுது தாமரையிடம் அவரது கணவரை ஹீரோவாக உணர்ந்த தருணம் குறித்து தொகுப்பாளர்கள் கேட்டுள்ளனர்.

அப்பொழுது தாமரை சொன்ன விஷயம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. அதாவது தாமரை பார்த்தசாரதியின் இரண்டாவது கணவர் ஆவார். முதல் திருமணத்தில் அவருக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் அவரையும் பார்த்தசாரதிதான் மிகவும் அன்பாக வளர்த்து வருகின்றாராம். தங்களுக்குப் பிறந்த மகனை விட அந்த மகனை பாசத்துடன் பார்த்து கொள்கிறார். அதனால் எனது கணவர் எனக்கு ஹீரோவாக தெரிகிறார் என கூறியுள்ளார்.