பிக்பாஸ் தாமரைக்கு இப்படியொரு ஆசையா.! உண்மையிலேயே வேற லெவல்தான்.! நெகிழ்ந்துபோன ரசிகர்கள்!!

பிக்பாஸ் தாமரைக்கு இப்படியொரு ஆசையா.! உண்மையிலேயே வேற லெவல்தான்.! நெகிழ்ந்துபோன ரசிகர்கள்!!


thamarai-said-her-wish-in-bigboss-jodikal-grand-finale

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. அதனை தொடர்ந்து பிக்பாஸில் கலந்துகொண்ட போட்டியாளர்களின் நடனத் திறமையை வெளிப்படுத்தும் வகையில் பிக்பாஸ் ஜோடிகள் என்ற டான்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதன் முதல் சீசனில் ஷாரிக் மற்றும் அனிதா சம்பத் அசத்தலாக நடனமாடி தங்களது திறமையை வெளிப்படுத்தி வெற்றியாளரானர். அதைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 தொடங்கி தற்போது வெற்றிகரமாக இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடன இயக்குனர் சதீஷ் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் ஜோடிகள் கிராண்ட் பினாலே வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிலையில் தனது கணவர் பார்த்தசாரதியுடன் நடனமாடும் தாமரையின் குடும்பத்தினர்கள் நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பிறகு தன்னை மக்கள் எவ்வாறு பார்க்கின்றனர் என்பதை கூறி கண்கலங்கிய தாமரை தன் பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் 10 பிள்ளைகளையாவது நான் படிக்க வைப்பேன் எனவும் கூறியுள்ளார். இதுகுறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.