சினிமா

என்னது.. பிக்பாஸ் தாமரையா இது! நம்பவே முடியலையே! வைரலாகும் பழைய புகைப்படங்கள்!!

Summary:

என்னது.. பிக்பாஸ் தாமரையா இது! நம்பவே முடியலையே! வைரலாகும் பழைய புகைப்படங்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தலாக விளையாடி மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் தாமரை. நாடகக் கலைஞரான அவர் ஆரம்பத்தில் விளையாட்டு தெரியாமல் இருந்தார். பின்னர் அனைத்தையும் நன்றாக புரிந்து கொண்டு டாஸ்க்குகள் அனைத்தையும் சிறப்பாக செய்து டஃப் போட்டியாளராக மாறினார்.

மேலும் தாமரைக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். பின்னர் அவர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.தாமரை தற்போது தனது கணவர் பார்த்தசாரதியுடன் ஜோடியாக பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அசத்தி வருகிறார்.

இதற்கிடையில் தாமரை சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் அவ்வப்போது எடுக்கும் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் தாமரை நாடகத்தின் போது எடுத்த பதிவிட்ட நிலையில் அதனைக் கண்ட ரசிகர்கள் தாமரையா இது! என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

 

 


Advertisement