தளபதி 68-ல் இணைந்த பிரபல நடிகை.. யார் தெரியுமா.?

தளபதி 68-ல் இணைந்த பிரபல நடிகை.. யார் தெரியுமா.?Thalapathy next movie actress

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் இளைய தளபதி விஜய். இவர் தமிழில் பல வெற்றி திரைப்படங்களை அளித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி இருக்கிறார் விஜய்.

thalapathy68

இது போன்ற நிலையில், சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் லியோ. இப்படம் பலவிதமான சர்ச்சைகளுக்கு பின்பு வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கிறார். படத்தின் படபூஜை சமீபத்தில் நடைபெற்று வரும் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது. மேலும் இப்படத்தில் விஜய் அப்பா, மகன் எனும் கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

thalapathy68

இந்த படத்தின் நடிகைகளாக மீனாட்சி சவுத்ரி, லைலா, சினேகா ஆகியோர் இணைந்த நிலையில் தற்போது லவ் டுடே பட நடிகை இவானாவும் படத்தில் இணைந்துள்ளார். இச்செய்தி இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.