சினிமா லைப் ஸ்டைல்

விஜய் ரசிகர்களுக்கு ரமலான் நன்னாளில் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட தளபதி-63 பட அப்டேட்.

Summary:

thalapathy 63

 தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை AGS சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். மேலும், கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி, ரெபா மோனிகா, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கின்றார்.

thalapathy 63 க்கான பட முடிவு

ஆனால் இப்படத்தின் அப்டேட் குறித்து சில நாட்களாகவே  விஜய் ரசிகர்கள்  தயாரிப்பாளரை  நச்சரித்து வருகின்றனர். அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதத்தில் ஏ.ஆர்.ரகுமான், ரமலான்  நன்னாளில்  தளபதி-63க்கான முதல் பாடல் வேலைகள் ஆரம்பமானது என்ற தகவலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார். 


Advertisement