முடிவு எடுத்தால்... தளபதி ரசிகர்கள் செய்த காரியத்தை பார்த்தீங்களா.! விவகாரமான அந்த போஸ்டரால் பரபரப்பு.!thalapathi-fans-controversy-poster

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றிருக்கும் அவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார்.  சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம்  அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் ரிலீஸுக்காக, அதன் ஒவ்வொரு அப்டேட்டிற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். மேலும் இந்த நிலையில் பல இடங்களில் பலவிதமான போஸ்டர்கள் ஒட்டி ரசிகர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். தளபதி விஜய்யை அரசியலுக்கு வர கூறி சில ஆண்டுகளாகவே ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது மதுரையில் விஜய் ரசிகர்கள் சிலர் அரசியல் சார்ந்த வித்தியாசமான போஸ்டர்களை ஒட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். அந்த போஸ்டரில், முடிவு எடுத்தால் முதல்வர்தான்  2021 ல் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டு தளபதி எனவும், 2026 ல் நடிகர் விஜய்யை குறிப்பிட்டு தளபதி எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

vijay

மேலும் அதில், 2026 ஆம் சட்டமன்ற தேர்தலில் தளபதி மக்கள் இயக்க முதல்வர் வேட்பாளர் விஜய்  எனவும், அவரின் அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர்  எனவும் அச்சிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி ஒட்டுமொத்த தமிழகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.