கார்த்திக் சுப்புராஜை ஓரங்கட்டிய விஜய்.. அப்போ இவருக்கு தான் வாய்ப்பா?

கார்த்திக் சுப்புராஜை ஓரங்கட்டிய விஜய்.. அப்போ இவருக்கு தான் வாய்ப்பா?



Thalapathi 69 movie possible to direct Atlee

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

மேலும், இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், மீனாட்சி சவுத்ரி, சினேகா, வைபவ், அரவிந்த், பிரேம்ஜி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படிப்பிடிப்பு சென்னை மற்றும் தாய்லாந்தில் நடைபெற்று வந்தது.

vijay

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்தப் படத்திற்கு GOAT என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த திரைப்படத்தை தொடர்ந்து 69வது திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் விஜய்யின் கடைசி படத்தை யார் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

vijay

இந்த நிலையில் விஜய்யின் கடைசி படத்தை ஹெச்.வினோத் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியது. அதேசமயம் விஜய்யின் கடைசி படத்தை அட்லீ இயக்க வாய்ப்புள்ளதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.