சினிமா

அட.. தளபதி 66 படத்தின் தலைப்பு இதுதானா! இந்த மாதிரியான கதைக்காகதான் இப்படியொரு டைட்டிலா!!

Summary:

அட.. தளபதி 66 படத்தின் தலைப்பு இதுதானா! இந்த கதைக்காகதான் இப்படியொரு டைட்டிலா!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து அடுத்ததாக  இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதன் முதலாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் இதில் சரத்குமார், ஷ்யாம், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் முழுவதும் குடும்பம், தந்தை-மகன் சென்டிமென்ட் என எமோஷனல் கதையாக உருவாக உள்ளதாகவும், மேலும் படத்தில் சண்டைக் காட்சிகள் எதுவும் இருக்காது எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்திற்கு வாரிசு என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் இணையத்தில் பரவி வருகிறது. இது எந்தளவிற்கு உண்மை என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
    


Advertisement