வெளியானது தளபதி 64 படத்தின் செம மாஸ் டைட்டில்! கெத்து காட்டும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

thalapathi 64 movie title first look poster released


thalapathi-64-movie-title-first-look-poster-released

விஜய், இயக்குனர் அட்லி கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்து உருவாகிய திரைப்படம் பிகில். பெண்களின் கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு உருவாக்கிய அந்த திரைப்படம் தீபாவளியன்று வெளியாகி  ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் சாதனையும் படைத்தது .

அந்த படத்தை தொடர்ந்து விஜய், மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில்  தளபதி64 படத்தில் நடிக்க உள்ளார்.  இந்த படத்தில் கதாநாயகியாக ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்த மாளவிகா மோகன் நடிக்கவுள்ளார்.  

thalapathi 64
மேலும் அப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும் , மலையாள நடிகர் ஆன்டனி வர்கீஸ், நடிகர் சாந்தனு, நடிகர் ப்ரவீன்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இன்னிலீலையில் தளபதி 64 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. தளபதி 64  படத்திற்கு மாஸ்டர் என பெயரிடப்பட்டுள்ளது. மிகவும் வித்தியாசமாக பர்ஸ்ட் லுக் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில்தளபதி ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.