அடேங்கப்பா! அச்சுஅசல் அப்படியே இருக்காரே! வெளியானது தலைவி பர்ஸ்ட் லுக் டீசர்! வியந்துபோன ரசிகர்கள்!

அடேங்கப்பா! அச்சுஅசல் அப்படியே இருக்காரே! வெளியானது தலைவி பர்ஸ்ட் லுக் டீசர்! வியந்துபோன ரசிகர்கள்!


thalaivi first look poster released

தனது திரையுலக பயணத்தின் மூலம் தமிழக மக்களிடம் அறிமுகமாகி,  அரசியலில் பல்வேறு இன்னல்களை சந்தித்து அதிமுக கட்சியின் பொது செயலாளராக மாறி தமிழகத்தை பலமுறை ஆட்சி செய்தவர் இரும்பு பெண்மணி  ஜெயலலிதா. இவர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  உயிரிழந்தார்.

அதனை தொடர்ந்து  ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க பாரதிராஜா, பிரியதர்ஷினி , லிங்குசாமி மற்றும் ஏ.எல் விஜய் உள்ளிட்ட பல இயக்குனர்கள் தீவிரம் காட்டினர். இதற்கிடையில் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கையை இயக்குனர் விஜய் படமாக எடுத்து வருகிறார்.

Thalaivi

மேலும்  தலைவி என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயலலிதாவாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் இன்று வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவின் சினிமா வாழ்க்கை முதல் அரசியல் வாழ்க்கை வரை அந்த டீசரில் இடம் பெற்றுள்ளது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.