சினிமா

அன்பே அமுதே ஆருயிரே..! வலிமை அப்டேட் செய்த சாமி போனியே.! தல ரசிகர்களின் வேற லெவல் போஸ்டர்.!

Summary:

போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடிக்கும் திரைப்படம் வலிமை. ஹெச். வினோத் இயக்கும் இப்படத்த

போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடிக்கும் திரைப்படம் வலிமை. ஹெச். வினோத் இயக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் அஜித் ஆக்சன் கலந்த காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். நீண்ட காலங்களாக வலிமை அப்டேட் எதுவும் வெளிவராத நிலையில் தல ரசிகர்கள் வலிமை பட அப்டேட்டுக்காக வெறித்தனமாக காத்திருந்தனர்.

மேலும் ரசிகர்கள் படக்குழு துவங்கி அயல் நாட்டுக்கு கிரிக்கெட் வீரர், முதலமைச்சர், பிரதமர் வரை அனைவரிடமும் வலிமை அப்டேட் கேட்டுள்ளனர். ரசிகர்களின் இத்தகைய செயல்களால் அதிருப்தி அடைந்த நடிகர் அஜித் அவர்களை பொறுமையாக இருக்க கூறி அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் முதன்முறையாக வலிமை குறித்த தகவலை போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில், அஜித்தின் 50-வது பிறந்தநாளையொட்டி வலிமை பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் விளம்பரங்கள் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். 

இந்த அப்டேட்டை பார்த்து உச்சகட்ட மகிழ்ச்சியடைந்த மதுரையைச் சேர்ந்த ரசிகர் ஒருவர், ”அன்பே அமுதே ஆருயிரே.. ”போனியே தல 60 வலிமை அப்டேட் 3 மணிக்கு ட்வீட் செய்த சாமியே” என்று போனி கபூரின் ட்வீட்டையும் போஸ்டரில் இணைத்து நன்றி தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement