அடுத்த பட அப்டேட்.. இப்போ வாய்ப்பில்ல.. தல அஜித்தே சொன்ன விஷயம்.!

அடுத்த பட அப்டேட்.. இப்போ வாய்ப்பில்ல.. தல அஜித்தே சொன்ன விஷயம்.!



thala-ajith-speak-about-next-update

பிரபல முன்னணி நடிகரான அஜித், வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு படத்தில் நடித்தார். இப்படம் ரசிகர்களுக்கு பொங்கல் பரிசாக வெளியானது. எதிர்பார்த்த அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடக்கும் போதே அஜித் பல இடங்களுக்கு சென்று சுற்றி வந்தார்.

அஜித்
இந்த நிலையில், துணிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பின் அஜித்குமார் வெளிநாட்டிற்கு சென்ற பல புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. சமீபத்தில், போர்ச்சுக்கலில் எடுத்த புகைப்படத்தை அவர் மனைவி ஷாலினி சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

மேலும், லண்டன், போர்ச்சுக்கல், ஸ்காட்லாந்து போன்ற நாடுகளுக்கு அஜித்குமார் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில், அஜித்துடன் ரசிகர்கள் சிலர் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அவர்கள் மகிழ்ந்து வருகின்றனர்.

அஜித்
அந்த வகையில் ஸ்காட்லாந்தில் கிளாஸ்கவ் பகுதியில் அஜித் தங்கி இருப்பதை அறிந்த அவரது ரசிகர் ஒருவர் நண்பர்களை அழைத்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை ஓடி சென்று நடிகர் அஜித்தை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது, நடிகர் அஜித்திடம் அடுத்த அப்டேட் பற்றி அவரது ரசிகர்கள் கேட்டபோது இப்போதைக்கு பிரேக் வேணும்பா என்று அன்பாக கூறி இருக்கிறார். இதை அவரது ரசிகர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். எனவே, அஜித்தின் Ak62 படம் வெளியாக நீண்ட நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.