சினிமா

தல அஜித்தின் 59 படத்தின் பெயர் வெளியானது!! ஃபர்ஸ்ட் லுக்கால் குதூகலத்தில் ரசிகர்கள்!!

Summary:

thala ajith in Nerkonda paarvai

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அல்டிமேட் ஸ்டார் அஜித் தனது 59 வது படத்தில் நடித்து வருகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின்  கணவர் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தை சதுரங்க வேட்டை,தீரன் போனி ஒன்று போன்ற படங்களை இயக்கிய வினோத் இயக்குகிறார். 

அமிதாப் பச்சன், டாப்ஸி போன்ற முன்னணி நடிகர்கள்  நடிப்பில் வெளியான 'பிங்க்'  படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை  கைப்பற்றியுள்ளார் போனி கபூர்.

இந்த படத்தில் இந்தி நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆத்விக் ரவிச்சந்திரன் போன்ற பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு யுவன் நடிகர்கள் ராஜா இசையமைகிறார்.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இப்படத்துக்கு 'நேர்கொண்ட பார்வை' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. 


Advertisement