அரசியல் தமிழகம் சினிமா

வா தலைவா மாற்றத்தை உருவாக்கு; தல அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் பிரபல இயக்குனர்.!

Summary:

thala Ajith - director susendiran called political

தல அஜித் அரசியலுக்கு வரவேண்டும் என்று பிரபல இயக்குனர் சுசீந்திரன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடி குழு, மாவீரன் கிட்டு, ராஜபாட்டை, ஜீனியஸ் ஆகிய படங்களை இயக்கியவர் சுசீந்திரன். தற்போது ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ள கருத்துகள் அஜித் ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

அந்த பதிவில் “40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன்கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இதுதான் 100% சரியான தருணம். 

வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு ... உங்களுக்காக காத்திருக்கும் பல கோடி மக்களில் நானும் ஒருவன்...” என இயக்குனர் சுசீந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  


Advertisement