சினிமா

ஷூட்டிங் செல்வதாக கூறிவிட்டு சென்ற தனுஷ் பட இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை!! ஏன்? என்னாச்சு? வெளிவந்த அதிர்ச்சி காரணம்!!

Summary:

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்திருந்த நடிகர் ஸ்ரீ வத்சவ் சந்திரசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா துறையில் கடந்த சில காலங்களாகவே பல பிரபலங்களின் தற்கொலைகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறு தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த நடிகர் சுஷாந்த் சிங் மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லையாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்த நடிகை சித்ரா ஆகியோர் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் மக்களை அதிரவைத்தது.. 

இந்நிலையில் தனுஷ் படத்தில் நடித்த இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்தில் நடித்திருந்தவர் ஸ்ரீவத்சவ் சந்திரசேகர். சென்னை பெரம்பூரை சேர்ந்த இவர் மாடலிங் செய்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி வல்லமை தாராயோ என்ற வெப் சீரியலிலும் நடித்துள்ளார். 

 இந்த நிலையில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஷூட்டிங் இல்லாதபோதும் படப்பிடிப்பு இருப்பதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. மேலும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் பதறிப்போன அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர் தேடியதில் அவர் தனக்குச் சொந்தமான மற்றொரு வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீவத்சவ் கடந்த சில மாதங்களாகவே மன நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement