ஏ.ஆர் ரஹ்மான் வீட்டு விஷேசத்தில் தமிழக முதல்வர்! அன்பளிப்பாக என்ன கொடுத்துள்ளார் பார்த்தீங்களா.! வைரலாகும் புகைப்படம்.!

ஏ.ஆர் ரஹ்மான் வீட்டு விஷேசத்தில் தமிழக முதல்வர்! அன்பளிப்பாக என்ன கொடுத்துள்ளார் பார்த்தீங்களா.! வைரலாகும் புகைப்படம்.!


tamilnadu-cheif-minister-participate-in-ar-rahman-daugh

தமிழ் சினிமாவில் ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர் ரஹ்மான். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று செம ஹிட்டானது. அதனைத் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்த நிலையில் அவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிளிலும் எக்கச்சக்கமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானின் மைத்துனர் அதாவது அவரது மனைவி சாய்ரா பானுவின் சகோதரர் நடிகர் ரகுமான்.அவரது மகள் ருஷ்டா ரகுமான். இவருக்கு அல்தாப் நவாப்  என்பவருடன் நேற்று சென்னையில் மிகவும் கோலாகலமாக திருமண வரவேற்பு விழா நடைபெற்றுள்ளது. அந்தத் திருமண வரவேற்பு விழாவில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் அந்த விழாவிற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் வருகை தந்துள்ளார்.

AR Rahman

மணமக்களை வாழ்த்திய அவர் அவர்களுக்கு பசுமை கூடை மரக்கன்றுகளை பரிசாக கொடுத்துள்ளார். அவரை தொடர்ந்து இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கலந்து கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.