சினிமா

கவர்ச்சியில் குதித்த கண்ணு தெரியாத நடிகை! யார் கொடுத்த அட்வைஸோ தெரியல!

Summary:

Tamil actress planned to act in glamour roles

குயிலின் ஓசையில் வரும் படத்தில் கண்ணு தெரியாமல் நடித்தார் நடிகை ஒருவர். படத்தில் அவருக்கு ஜோடியாக ரூட்டு தலை ஒருவர் நடித்திருந்தார். படம் என்னவோ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் நாயகி மற்றும் ஹீரோ இருவரும் நடிப்பில் பின்னி பெடலெடுத்தனர். ஆனால் படத்தின் நாயகி என்ன நினைத்தாரோ தெரியவில்லை, இனி படங்களில் நடிக்கப்போவதில்லை என முடிவெடுத்தார்.

ஆனால் அடுத்த வருடமே தெலுங்கு படம் ஒன்றில் நடித்தார் அந்த கண்ணு தெரியாத நடிகை. இவர் நடிக்கும் படங்களில் பொதுவாக குடும்ப பாங்கான பெண்ணாகவே நடித்துவந்தார். என்னதான் நடிப்பில் திறமை இருந்தாலும் படத்தில் கவர்ச்சி இல்லைனா வாய்ப்புகள் குறையும் என்பது இவருக்கு சரியாக அமைந்தது.

இதனால் பட வாய்ப்புகளும் குறைய தொடங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த நாயகி மெதுவாக மார்க்கெட் நிலவரம் பற்றி தெரிந்துகொள்ள இனி தானும் கவர்ச்சியில் குதிக்க போவதாகா நெருங்கிய வட்டாரங்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் கண்ணு தெரியாமல் நடித்த போது மிகவும் ஒல்லியாக இருந்த இவர் தற்போது உடல் எடை கூடி சற்று குண்டாகவும் மாறியுள்ளாராம்.

சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு விழாவிற்கு மிகவும் கவர்ச்சியாக வந்த நடிகையை பார்த்த ரசிகர்கள் அவரா இவர் என வாய்பிளக்க பார்த்ததாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.


Advertisement