அஜித்தின் விடாமுயற்சி கைவிடப் பட்டதா...!!! பிரபல நடிகரின் பதிவால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி.?



Tamil actor posted about Ajith vidamuyarchi

நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் மகிழ்திருமேனி கூட்டணியில் "விடாமுயற்சி" எனும் படத்தைப் பற்றிய அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

Ajith

அஜித் மற்றும் மகிழ்திருமேனி கூட்டணி ஏற்கனவே "துணிவு" படத்தின் மூலம் வெற்றிக்கூட்டணியாக அறியப்பட்டது. அறிவிப்பு வந்து பல மாதங்களாகியும், படப்பிடிப்பு  இன்னும் தொடங்கப்படாததால்,அஜித் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இந்நிலையில்,விடாமுயற்சி படம் கைவிடப்படுவதாக தகவல் பரவியதால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏற்கனவே விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு, மகிழ்திருமேனி இயக்குவதாக அறிவித்தனர்.

Ajith

இந்நிலையில், துணை நடிகரான பிரசாந்த் ரங்கசாமி, அஜித் சார் அவருடைய சொந்த காரணங்களுக்காக தேதி ஒதுக்காததால், படம் எப்போது தொடங்கும் என்று லைக்கா நிறுவனமே அறிவிக்கும்" என்று பதிவிட்டுள்ளார். எனவே ரசிகர்கள் அஜித்தின் மீது வருத்தமடைந்துள்ளனர்.