தமிழகம் சினிமா

தமிழ் சீரியல்களில் தமிழக நடிகைகளுக்கு நடக்கும் கொடுமைகள்!

Summary:

tami serial actress


தற்போது அணைத்து தொலைக்காட்சிகளும் போட்டிக்கு போட்டியாக சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர். அதேபோல் தமிழகத்தில் சினிமாவை விட சீரியல்களுக்கே அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். ஆனால் தமிழ் சீரியல்களில் பெரும்பாலும் தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. உண்மையான அழகு என்றால் அது தமிழ் பெண்கள் தான். ஆனாலும் பல சீரியல்களில் தமிழ் பெண்களுக்கு வாய்ப்புகள் கொடுக்காமல் கேரளா, கர்நாடகா என வேறு மாநில பெண்களுக்கே வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

பொதுவாக வேறு மாநில பெண்களை வெள்ளையாக இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக தமிழ் சீரியல்களில் நடிக்க வைக்கிறார்கள் என சீரியலில் நடிக்கும் தமிழ் நடிகைகள் கூறுகின்றனர். தமிழ் பெண்கள் நிறத்தில் சற்று குறைவு என்றாலும் அழகில் தமிழ் பெண்களை அடித்துக்கொள்ள ஆளில்லை. ஆனாலும் நம்ம ஆளுங்க ஏன் வெள்ளையா இருக்கிற பொண்ணுங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறாங்கனு பல தமிழ் நடிகைகள் கூறுகின்றனர்.

tamil channels க்கான பட முடிவு

தற்போது பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான சீரியல் தொடர்களில் பிற மாநில பெண்களே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் ஹிந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களை டப்பிங் செய்தும் ஒளிபரப்புகின்றனர். கர்நாடக மாநிலத்தில் அம்மாநில நடிகர் நடிகர்களுக்கு வாய்ப்புகள் குறைந்துவிடும் என்பதற்காக டப்பிங் சீரியல்களை தடை செய்துள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் தான் தமிழில் சீரியல் எடுத்தாலும் தமிழ் நடிகர் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதுகுறித்து உங்களது கருத்து என்ன என்பதை பதிவிடுங்கள்.


Advertisement