கவர்ச்சியில் ரசிகர்களை திக்கு முக்காட வைத்த தமன்னா!tamannaah-red-hot-pic-storms-the-internet

தமிழ் சினிமாவில் சில காலங்களுக்கு முன்பு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தமன்னா பாட்டியா. கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிய இவர் கல்லூரி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பெற்றார். அதனைத் தொடர்ந்து அயன் பாகுபலி, கண்டேன் சீதையை, ஆனந்த தாண்டவம், பையா போன்ற வெற்றி படங்களில் நடித்தவர்.

அதன் பிறகு தமிழில் மார்க்கெட் சரிய தொடங்கியதால் தெலுங்கு மலையாளம் ஹிந்தி மராத்தி என பிறமொழி படங்களில் நடித்து வந்தார். மேலும் மாடலிங்கில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். தற்போது சூப்பர் ஸ்டார் நடிக்கும் ஜெயிலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரி-எண்ட்ரீ கொடுக்க இருக்கிறார் நடிகை தமன்னா.


tamanna
தமிழில் கடைசியாக இவர் விஷாலுடன் இணைந்து நடித்த ஆக்சன் என்ற திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு நான்கு வருடங்கள் கழித்து தற்பொழுது சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக தமிழ் சினிமாவிற்கு மீண்டும் வந்திருக்கிறார். ஜெயிலர் படத்தில் தமன்னாவும் நடிக்கிறார் என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் தான் மாடலிங் செய்யும் நிறுவனங்களுக்கான புகைப்படங்களையும் வீடியோக்களையும் தன் ரசிகர்களுடன் பகிர்வது தமன்னாவின் வழக்கம். இதைப் போல இவர் பதிந்த ஒரு பதிவு ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சிவப்பு நிறத்தில் படு கவர்ச்சியான ஆடை ஒன்றை அணிந்து எடுத்த புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் தமன்னா.
tamanna
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருக்கும் தமன்னாவின் அழகை கண்டு ரசிகர்கள் திக்கு முக்காடி போய் உள்ளனர். தமிழ் சினிமாவிலிருந்து சிறிது ஒதுங்கி இருந்தாலும் சமூக வலைதலங்களில் அவ்வப்போது இது போன்ற புகைப்படங்களை பகிர்ந்து ட்ரெண்டிங்கில் என்றும் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் தமன்னா.