அடேங்கப்பா... நடிகை தமன்னாவின் அழகின் ரகசியம் இந்த மூன்று விஷயங்கள் தானா... அவரே கூறிய பதிவு...

தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதனை தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விஷால் என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து எக்கசக்கமான சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. 15 வருடங்களுக்கு மேலாக நடித்து வரும் நடிகை தமன்னாவின் கைவசம் தற்போது நிறைய படங்கள் உள்ளன.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் தமன்னாவிடம் ரசிகர் ஒருவர் உங்கள் அழகின் ரகசியம் என்ன என்று கேட்டுள்ளார். அதற்கு இவ்வாறு பதிலளித்துள்ளார். அதாவது நல்ல ஊட்டச்சத்தான உணவு, போதுமான ஓய்வு, நல்ல சரும பராமரிப்பு ஆகியவை தான் அழகின் ரகசியம் என கூறி இருக்கிறார்.
Good nutrition, adequate rest and a solid skin care routine 😊 https://t.co/t2q1wRGDCa
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) July 5, 2022