எங்கள் அண்ணா படநடிகை சொர்ணமால்யாவா இது! அவரோட தற்போதைய நிலைமையை பார்த்தீர்களா!

எங்கள் அண்ணா படநடிகை சொர்ணமால்யாவா இது! அவரோட தற்போதைய நிலைமையை பார்த்தீர்களா!


swarnamalya-latest-photo-viral

பிரபல முன்னணி தொலைக்காட்சியில் இளமை புதுமை என்ற நிகழ்ச்சியின் மூலம்  தொகுப்பாளினியாக அறிமுகமாகி, தனது பேச்சால் அப்பொழுதே ரசிகர்களிடம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை சொர்ணமால்யா. நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் அமெரிக்கா சென்று அதற்காக சினி பள்ளியில் சேர்ந்து படித்துள்ளார்.மேலும் அதனைத் தொடர்ந்து சென்னை திரும்பிய பின்னரே அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார்.

மேலும் பரதத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர் அதனையும் முறையாக கற்று வந்தார்.  நாளடைவில் அவர் அலைபாயுதே திரைப்படத்தில் நடிகை ஷாலினியின் சகோதரியாக நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமாகி பெருமளவில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர் எங்கள் அண்ணா,  பெரியார்,  மொழி, வெள்ளித்திரை,  புலிவால் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

sornamalya

பின்னர் அவருக்கு சரியான படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் சென்னையிலேயே ஒரு பரத நாட்டிய பள்ளி துவங்கி பல குழந்தைகளுக்கு பரதம் கற்பித்து வருகிறார். அதுமட்டுமின்றி பரத நாட்டிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல்வேறு மேடைகளிலும் நடனமாடியுள்ளார். இந்நிலையில் அவரது தற்போதைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

sornamalyasornamalyasornamalya