சினிமா

தமிழகத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் பரிதாப பலி! நெஞ்சை உலுக்கும் துயர சம்பவத்திற்கு நடிகர் சூர்யா இரங்கல்!

Summary:

Surya tweet about kerala landslide

கேரளாவில் மூணாறு அருகே ராஜமாலா தேயிலை தோட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 80க்கும் மேற்பட்டோர் மண்ணோடு மண்ணாக புதைந்தனர். இதில் 52 பேரின் உடல் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. மேலும் 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மீதமுள்ள நபர்களை தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர், தீயணைப்பு படையினர், காவல் அதிகாரிகள் என  பலரும் தொடர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் நடிகர் சூர்யா இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 
கேரள, இடுக்கி மாவட்டத்தில் நடந்த நிலச்சரிவு விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது வேதனையை  அளிக்கிறது. 

குடும்பத்திற்காகவும், குழந்தைகளின் எதிர்கால நலனுக்காவும் பிறந்த மண்ணைவிட்டு பிரிந்து சென்று வேலை செய்தவர்கள் உயிருடன் மண்ணில் புதைந்து இறந்து போனது தாங்க முடியாத துயர நிகழ்வு.  நெஞ்சை உலுக்கும் இந்த இயற்கை விபத்தில் உயிரிழந்தவர்களின் துயரத்தில் நானும்  பங்கெடுத்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.


Advertisement