ஆஹா..! சூப்பர்..!! இந்த பாட்டு செமையா இருக்கு! திரும்ப திரும்ப கேக்குறேன்! புகழ்ந்து தள்ளிய சூர்யா! அதுவும் எந்த பாட்டு தெரியுமா?

ஆஹா..! சூப்பர்..!! இந்த பாட்டு செமையா இருக்கு! திரும்ப திரும்ப கேக்குறேன்! புகழ்ந்து தள்ளிய சூர்யா! அதுவும் எந்த பாட்டு தெரியுமா?


surya-tweet-about-enjoy-enjaami-song

தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் குத்தாட்டம் போட வைத்த பாடல் என்ஜாயி எஞ்சாமி. எங்கு பார்த்தாலும் அந்த பாடல் தான் தற்போது ஒலித்துக்கொண்டிருக்கிறது. 

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் சந்தோஷ் நாராயணன் இசையில் தெருக்குரல் அறிவு மற்றும் தீ  இணைந்து பாடிய பாடல் என்ஜாயி எஞ்சாமி. வித்தியாசமான வரிகளுடன், இசையில் உருவான இந்த பாட்டு யூட்யூப்பில் வெளியாகி கோடிக்கணக்கான லைக்குகளை பெற்றது. மேலும் பல திரை பிரபலங்களும் அப்பாடலை பாராட்டி இருந்தனர்.

இந்நிலையில் பிரபல நடிகர் சூர்யா இந்த பாடல் குறித்து பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. காட்சிகள் மிக அழகாக இருக்கிறது . மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். தெருக்குரல் அறிவுக்கு  பாராட்டுக்கள். தீ-யின் குரல் மெய் மறக்க செய்கிறது. படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.