சினிமா

இதுக்கு முன்னாடி இப்படி பார்த்ததில்லை! நெகிழ்ந்துபோன நடிகர் சூர்யா! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!

Summary:

இதுக்கு முன்னாடி இப்படி பார்த்ததில்லை! நெகிழ்ந்துபோன நடிகர் சூர்யா என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான இந்த படம் பழங்குடி பெண்ணிற்கு நேர்ந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ளார்.

இப்படம் வெளியானது முதலே மாபெரும் வரவேற்பையும், அதே சமயம் எதிர்ப்பையும் பெற்று வருகிறது. ஜெய்பீம் படத்தில் வில்லனாக வரும் குருமூர்த்தி என்ற காவலரின் வீட்டில் வன்னியர்களின் சின்னமான 'அக்னிகும்பம்' இடம்பெற்ற நாட்காட்டி தொங்குவதைப் போன்ற காட்சி இடம்பெற்றதாக சர்ச்சை எழுந்தது. அதனைத் தொடர்ந்து அந்த காட்சி நீக்கப்பட்டது. ஆனாலும் இப்படத்தில் வன்னிய சமுதாயம் இழிவுபடுத்தப்பட்டுள்ளதாக சூர்யா மற்றும் படக்குழுவிற்கு எதிராக பெரும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தால் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட பாமக நிர்வாகி ஒருவர் அறிவிப்பு வெளியிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் சூர்யாவிற்கு ஆதரவாக குரல் கொடுக்கத் துவங்கினர்.

இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ஜெய்பீம் திரைப்படத்திற்கு கிடைத்த அன்பு என்னை திக்குமுக்காட வைக்கிறது. இதற்கு முன் நான் இப்படி அனுபவித்தது கிடையாது. நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு, நன்றி காட்ட என்னிடம் வார்த்தையே இல்லை. எங்களோடு துணை நிற்கும் உங்களுக்கு இதயம் கனிந்த நன்றி என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்


Advertisement