தமிழகம் சினிமா

இன்று வெளியாகும் சூர்யாவின் என்ஜிகே; ரசிகர்களின் உச்சகட்ட கொண்டாட்டம்.!

Summary:

surya movie ngk today release - enjoy surya fans

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பிற்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவர் சினிமா மற்றும் இன்றி பல பொதுநல செயல்களிலும் சமுதாய நலன் கருதி ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை டி. ஆர்.பிரகாஷ்பாபு மற்றும் டி. ஆர் பிரபு ஆகியோரின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த  திரைப்படத்தில் சூர்யாவுடன் நடிகை ராகுல் பிரீத் சிங் சாய்பல்லவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படம் இன்று மே 31ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் திருத்தணி அருகே சூர்யா ரசிகர்கள் 215 அடி பிரம்மாண்ட கட் அவுட் ஒன்றை வைத்திருந்தனர். மேலும், மதுரையில் சூர்யா ரசிகர்கள் திரையரங்கு மீது ஏறி நின்று சூர்யா பேனருக்கு பாலாபிஷேகம் செய்துள்ளனர். 

 


Advertisement