BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
அச்சோ.. நீதி போராளி சூர்யாவை காணவில்லை! இணையத்தில் வைரலாகி பரபரப்பைக் கிளப்பிய போஸ்டர்! புகைப்படம் இதோ!!
டிஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இருளர் இன மக்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அடிப்படையாக கொண்ட இப்படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்திருந்தார்.
ஆனால் இப்படம் வன்னியர்கள் சமூகத்தினரை தவறாக சித்தரிப்பது போன்று இருப்பதாக சர்ச்சை எழுந்தது. அதனைத் தொடர்ந்து சூர்யா எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே ஓரளவிற்கு கலவையான விமர்சனத்தை பெற்றது. பின்னர் சூர்யா கைவசம் தற்போது பாலா இயக்கத்தில் ஒரு படம், மற்றும் வாடிவாசல் படங்கள் உள்ளன.

இந்த நிலையில் தற்போது சூர்யாவை காணவில்லை என போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது. அதில், தமிழக மக்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் உடனே லெட்டர் பேடை தூக்கிக்கொண்டு வந்து குரல் கொடுக்கும் சமூக நீதிப் போராளி அண்ணன் சூர்யாவை கடந்த ஒரு வருடமாக காணவில்லை. ஆண் தாய் ஆட்சியில் மக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என நினைத்து விட்டு கோமாவிற்கு போய்விட்டார் போலும்! எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.