திரை துறையிலிருந்து பிரேக் எடுத்துக் கொண்ட நடிகர் சூர்யா.. ரசிகர்கள் அதிர்ச்சி.!surya-going-to-take-break-in-cini-life

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் சூர்யா. இவர் தமிழில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டியிருக்கிறார் சூர்யா.

surya

இவ்வாறு தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து வரும் சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் 'கங்குவா' திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வந்தன.

இந்நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பின் போது மேலே தொங்கிக் கொண்டிருந்த கேமரா அருந்து விழுந்து சூர்யாவிற்கு காயம் ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் சூர்யா. மேலும் இணையத்திலும் இச்செய்தி தீயாய் பரவி வந்தது.

surya

இது போன்ற நிலையில், தற்போது மருத்துவர்கள் இரண்டு வாரம் ஓய்வில் இருக்க சொல்லி அறிவுறுத்தியதால் சினிமாவில் நடிப்பதில் சிறிது காலம் பிரேக் எடுக்க போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.