சினிமா

கதைத் திருட்டில் சிக்கிய சூர்யாவின் படம்! விஷயம் தெரிஞ்சதுமே அவர் செய்த காரியத்தை பார்த்தீர்களா!!

Summary:

கதை திருட்டில் சிக்கிய சூர்யாவின் படம்! விஷயம் தெரிஞ்சதுமே அவர் செய்த காரியத்தை பார்த்தீர்களா!!

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் என்ற பெயரில் சொந்த தயாரிப்பு நிறுவனத்தை வைத்துள்ளார். மேலும் இதன் சார்பாக பெரிய பட்ஜெட் தொடங்கி சிறு பட்ஜெட் வரை பல படங்களையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில் தற்போது சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவான திரைப்படம்
இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும். 

இந்தப் படத்தை அரிசில் மூர்த்தி என்பவர் எழுதி இயக்கியிருந்தார். 
கடந்த மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இப்படம் கதை திருட்டில் சிக்கியுள்ளது. அதாவது கடந்த 2016-ம் ஆண்டு மராத்தி மொழியில் வெளியான ‘ரங்கா படாங்கா’ படத்தின் கதையை தழுவி தான் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படம் எடுக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

இந்த விஷயம் சூர்யாவின் கவனத்திற்கு சென்ற நிலையில், உடனே அவர் இயக்குனரை அழைத்து இதுகுறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது. பின்னர் உடனே சூர்யா சம்மந்தப்பட்ட மராத்தி படக்குழுவினரை அழைத்து அவர்களுக்கு உரிய தொகையை நஷ்ட ஈடாக கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


Advertisement