தமிழகம் சினிமா Covid-19

எனக்கு கொரோனாவா.? நான் தலைமறைவா..? பரபரப்பு வீடியோ காட்சிகளை வெளியிட்ட சூர்யா தேவி.! வைரல் வீடியோ.!

Summary:

Surya devi viral video about corona controversy

நடிகை வனிதா மூன்றாவது திருமணம் செய்தது குறித்து பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வைரலாகிவந்த சூர்யா தேவி என்ற பெண்ணிற்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், அவர் தலைமறைவாகிவிட்டார் எனவும் செய்திகள் வெளியான நிலையில் தற்போது ஆவேசமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு மறுப்பு தெரிவித்துள்ளார் சூர்யா தேவி.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் போலீசார் சூர்யா தேவியை விசாரணைக்காக அழைத்துசென்றநிலையில் அங்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கும், அவரை அழைத்துச்சென்ற காவல் ஆய்வாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், விசாரணையின்போது உடனிருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த இருப்பதாகவும் கூறப்பட்டது.

அதேநேரம் கொரோனா உறுதியான பிறகு சூர்யா தேவி தலைமறைவாகிவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தான் தலைமறைவாக இருப்பதாக கூறிய தனியார் தொலைக்காட்சியை திட்டி தீர்த்ததோடு, தமிழக காவல்துறை, நடிகை வனிதா ஆகியோர் பற்றியும் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு மீண்டும் சர்ச்சையான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சூர்யா தேவி. இதோ அந்த வீடியோ.


Advertisement