18 வருடங்களுக்கு பிறகு.. செம ஹேப்பியாக நடிகர் சூர்யா வெளியிட்ட பதிவு! ஏன்? எதனால் தெரியுமா??

18 வருடங்களுக்கு பிறகு.. செம ஹேப்பியாக நடிகர் சூர்யா வெளியிட்ட பதிவு! ஏன்? எதனால் தெரியுமா??


surya-bala-movie-shooting-starting

தமிழ் திரையுலகில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் எதற்கும் துணிந்தவன். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில்,
பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று ரூ.200 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து சூர்யா, இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிக்கிறார். அந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்  தயாரிக்கிறது. இதில் ஹீரோயினாக கிரித்தி ஷெட்டி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இந்தப்படம் மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் படப்பிடிப்பு இன்று கன்னியாகுமரியில் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில்,"18 வருடங்களுக்கு பிறகு இன்று, பாலா அண்ணன் ஆக்ஷன் என கூறுவதை பக்கத்தில் இருந்து கேட்கும் வாய்ப்பை பெற்றுள்ளேன். மிக்க மகிழ்ச்சி" என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். இதற்கு முன்பு சூர்யா, பாலா இயக்கத்தில் நந்தா மற்றும் பிதாமகன் போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.