சினிமா

வாவ்.. செம கியூட்! சிறுவயதில் பிரபல நடிகரின் மடியில் ஜாலியாக அமர்ந்திருக்கும் விஜய் மற்றும் சூர்யா! வைரலாகும் அரிய புகைப்படம்

Summary:

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்று முன்னணி நட

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்று முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் சூர்யா. அவர்கள் என்ன செய்தாலும், அவர்களை குறித்த எந்த செய்திகள் வெளிவந்தாலும் அதனை ரசிகர்கள் பெருமளவில் ட்ரெண்டாக்குவர். 

 நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். மேலும் அதன் படப்பிடிப்புக்காக அவர் தற்போது ஜார்ஜியா சென்றுள்ளார்.  மேலும் நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் தனது 40வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்திலும் பின்னர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார்.

நடிகர் சூர்யாவின் தந்தை சிவகுமார். 70,80ஸ் காலகட்டங்களில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்தவர். இந்த நிலையில் சிறுவயதில் நடிகர் சிவகுமார் மடியில் சூர்யாவும், விஜய்யும் ஒன்றாக அமர்ந்திருக்கும் அரிய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.


Advertisement