என்னது.. பாலா இயக்கும் சூர்யா 41 படத்தின் தலைப்பு இதுதானா?? தீயாய் பரவும் புதிய தகவல்!!"

என்னது.. பாலா இயக்கும் சூர்யா 41 படத்தின் தலைப்பு இதுதானா?? தீயாய் பரவும் புதிய தகவல்!!"


Surya 41 movie title detail viral

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா அடுத்ததாக பாலாவுடன் கூட்டணியில் இணைந்து சூர்யா 41வது படத்தில் நடித்து வருகிறார். மீனவர்களின் பிரச்சனையை மையமாகக்கொண்டு உருவாகும் இப்படத்தை சூர்யாவின் 2 டி என்டர்டைன்மெண்ட் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

மேலும் இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இதில் மலையாள நடிகை மமிதா பைஜூவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வந்தது.

bala

மேலும் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது பாலா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகும் சூர்யா 41 வது படத்தின் தலைப்பு குறித்த தகவல் பரவி வருகிறது. அதாவது படத்திற்கு 
வணங்கான் அல்லது கடலாடி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த பின்னரே தெரியவரும்.