பிக்பாஸ் வீட்டிற்கு வந்த தர்சனின் அம்மாவிற்கு காத்திருந்த மாபெரும் சர்ப்ரைஸ்.! கோலாகலமான பிக்பாஸ் வீடு!!



surprise-for-dharshan-mother-in-bigboss-house

பிக்பாஸ் சீசன் மூன்று 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு, மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களாக கவின், லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்ஷண், வனிதா ஆகியோர் மட்டுமே உள்ளனர் . மேலும் கடந்த வாரம் சீக்ரட் ரூமில் அடைக்கப்பட்ட சேரன் தற்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வர பலருக்கும் சந்தோசம் ஏற்பட்டது. 

இந்நிலையில் நேற்றைக்கு முந்தையநாள் முதல் புதிய டாஸ்க் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தருகின்றனர். அதன்படி கடந்த நாட்களில் முகேன் மற்றும் லாஸ்லியாவின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்து போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

Tharshanஇதனை தொடர்ந்து இன்று தர்சனின் அம்மா மற்றும் அவரது தங்கை பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளனர். இந்நிலையில் மகனை பார்த்ததும் தர்சனின் தாயார் சந்தோஷத்தில் கட்ட்டியணைத்து முத்தமழையை பொழிந்துள்ளார். மேலும் அவரது தங்கையும் அன்பு அண்ணனை அன்போடு கட்டிஅணைத்து பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

இதனை தொடர்ந்து அனைவரும் சந்தோசமாக பேசிக்கொண்டிருந்த நிலையில் அனைவரும் தர்சனின் தாயாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர், இதனை கேட்டு அவர் மகிழ்ச்சியடைந்துள்ளார். பின்னர் சர்ப்ரைசாக பிக்பாஸ் அவர்களுக்கு கேக் அனுப்பி வைத்தநிலையில் அவர்கள் அதனை வெட்டி கோலாகலமாக பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.