தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
ஜெயிலர் சூட்டிங்க்கு ஆப்பு?.. சூப்பர் ஸ்டாரையே கடுப்பாக்கிய தமிழ் நடிகர்கள்?.! கொந்தளிப்பில் ரசிகர்கள்..!!
தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் நடைபெறும் படப்பிடிப்புகள் அனைத்தும் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நிறுத்தப்படும் என தெலுங்கு தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக தமிழில் எடுக்கப்படும் படங்களின் படப்பிடிப்பு வெளிமாநிலங்களில் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ள ஜெயிலர் படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தெலுங்கு தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக் நடத்த இருப்பதால், படங்களின் படப்பிடிப்பு நடைபெறுமா? இல்லையா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஏனென்றால் வெளிமாநிலங்களில் படப்பிடிப்பு நடத்த தெலுங்கு பட தொழிலாளர்களின் ஒத்துழைப்பு தேவைப்படும். இதன் காரணமாக ஜெயிலர் படத்திற்கான படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் வரை தள்ளிப் போக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதன் காரணமாக ரஜினி மற்றும் நெல்சன் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஸ்ட்ரைக்குக்கு முக்கிய காரணமாக, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் பல நடிகர்கள் தெலுங்கு சினிமாவில் நடித்து வருவதுதான் என்று கூறப்படுகிறது. குறிப்பாக தனுஷின் வாத்தி, சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் மற்றும் விஜயின் வாரிசு போன்ற படங்களில் தமிழ் நடிகர்கள் தெலுங்கில் நடித்து வரும் நிலையில், சூர்யாவும் விரைவில் ஒரு தெலுங்கு படம் நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.
தமிழ் மொழியில் நடிக்கும் போது படத்திற்கு கொடுக்கும் சம்பளத்தை விட, தெலுங்கில் அதிகமாக இருப்பதால் தெலுங்கு படத்தில் நடிகர்கள் நடிக்கின்றனர். இதன் காரணமாகவே ஸ்ட்ரைக் நடைபெற இருப்பதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டுள்ளது.