சினிமா

மேடையில் குஷ்புவுடன் செம ஸ்டைலாக ஆட்டம் போட்டுள்ள சூப்பர் ஸ்டார்! எப்போ தெரியுமா?? அரிய வீடியோ இதோ!!

Summary:

மேடையில் குஷ்புவுடன் செம ஸ்டைலாக ஆட்டம் போட்டுள்ள சூப்பர் ஸ்டார்! எப்போ தெரியுமா?? இணையத்தை கலக்கும் அரிய வீடியோ!!

தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான சூப்பர் ஹிட், மாஸ் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக, சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் ரஜினி. அன்றும், இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கும்.

மேலும் இவரது படங்கள் வெளியாகும் நாட்கள், பிறந்தநாள் போன்றவற்றை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடுவர். இறுதியாக நடிகர் ரஜினி சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் ரஜினி ரசிகர்கள் அவரை குறித்த வீடியோக்கள் மற்றும் அரிய தகவல்கள் எது வெளிவந்தாலும் அதனை சமூக வலைதளங்களில் பெருமளவில் வைரலாக்குவர். இந்நிலையில் கடந்த 1995ஆம் ஆண்டு நடைபெற்ற விழா ஒன்றில் சூப்பர் ஸ்டார் மேடையில் நடனமாடி, பாட்ஷா படத்தில் வருவது போல வசனம் பேசியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் இந்த விழாவில் லதா ரஜினிகாந்த், குஷ்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.


Advertisement