புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
ஒருவரை பார்த்தா பாசிட்டிவா பேசுங்க., நல்லத மட்டும் பேசுங்க - சூப்பர்சிங்கர் ராஜலட்சுமி ரசிகர்களுக்கு வேண்டுகோள்..! ஏன் தெரியுமா?..!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர்சிங்கர் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்று பிரபலமடைந்தவர்கள் செந்தில்கணேஷ் மற்றும் ராஜலட்சுமி. இவர்கள் சூப்பர் சிங்கர் மேடையில் தங்களது நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம்பிடித்தனர்.
இதனை தொடர்ந்து செந்தில் தனது விடாமுயற்சியினால் பைனலுக்கு சென்று வீட்டை பரிசாக பெற்றார். இந்த நிகழ்ச்சி அவர்களின் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது என்றே கூறலாம். இந்த ஜோடிகள் தற்போது திரையுலகில் பல பாடல்களையும் பாடி வருகின்றனர்.
அத்துடன் இருவரும் உள்ளூர் மற்றும் வெளியூர் கச்சேரிகளில் தங்களுடைய நாட்டுப்புற பாடலை ஒலிக்க செய்து வருகின்றனர். இவர்கள் சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருப்பார்கள். அந்த வகையில் சமீபத்தில் தனது வீட்டு கிரகப்பிரவேசம் வீடியோவை சோசியல் மீடியாவில் ராஜலட்சுமி தம்பதியினர் பதிவிட்டிருந்தனர்.
இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், ராஜலட்சுமி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் அவர், "ஒருவரை பார்த்தவுடன் நீ ஏன் இளைத்து போய்விட்டாய்?, ஏன் கருப்பாகிவிட்டாய், இது உனக்கு நல்லாவே இல்லை என்று நெகட்டிவ்வான விமர்சனங்களை சொல்லாமல், நல்ல விஷயங்களை மட்டும் கூறுங்கள்.
கேட்பவர்களுக்கு அது மகிழ்ச்சியை கொடுக்கும். சொல்பவர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும்" என்று கூறியிருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் உங்களுடைய வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் உங்களைப் பற்றி நெகட்டிவாக பேசிகொண்டிருக்கும்போது நீங்கள் இதுபோன்ற பாசிட்டிவாக தெரிகிறது நன்றாக இருப்பது ஏன் என்று கூறி வருகின்றனர்.