சூப்பர் சிங்கர் புகழ் ப்ரித்திகா இப்போ எப்படி இருக்காங்க, என்ன பன்றாங்க தெரியுமா?

சூப்பர் சிங்கர் புகழ் ப்ரித்திகா இப்போ எப்படி இருக்காங்க, என்ன பன்றாங்க தெரியுமா?


Super singer prthvika current status

விஜய் டிவி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் ஏராளம். நடிகர் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், சந்தானம் என பலரும் விஜய் டீவியில் இருந்து தமிழ் சினினிமாவிற்கு வந்தவர்கள்தான். அதுமட்டும் இல்லாமல் நடனம், பின்னணி பாடகர்கள் என பலர் விஜய் டீவியில் இருந்து வந்தவர்கள்தான்.

அதில் ஒருவர்தான் சூப்பர் சிங்கர் ப்ரித்திகா. சாதாரண ஒரு குடும்பத்தை சேர்ந்த ப்ரித்திகா விஜய் டீவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடத்தில் பிரபலமானார்.

super singer

சூப்பர் சிங்கர் ஜுனியர் 10வது சீசனில் பாடி பலரையும் கவர்ந்தவர் ப்ரித்திகா. மிகவும் கஷ்டப்படும் குடும்பத்தில் இருந்த வந்த இவருக்கு சில பிரபலங்கள் உதவுவதாக எல்லாம் கூறியிருந்தனர்.

ஒருவழியாக நீண்ட போராட்டத்திற்கு பிறகு தனது திறமையால் சூப்பர் சிங்கர் 10 வது சீஸனின் வெற்றியாளராக மகுடம் சூட்டினார் பிரித்விகா. நிகழ்ச்சிக்கு பிறகு இவர் என்ன செய்கிறார் என்று எந்த விவரமும் வராமல் இருந்தது. இப்போது ப்ரித்திகா சென்னையில் குடும்பத்துடன் செட்டில் ஆகியுள்ளாராம்.

இங்கு உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறாராம், அதோடு ஒருபக்கம் இசை நிகழ்ச்சி என பிஸியாக இருக்கிறார். எல்லாரின் பாராட்டுக்களையும் பெற்ற பரியேறும் பெருமாள் படத்தில் ப்ரித்திகா பாடிய பாடலும் செம ரீச், இதுதான் அவருடைய முதல் பட பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.