புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
ராட்சச மாமனே... வசீகர குரலால் மெய் மறக்கவைத்த சூப்பர் சிங்கர் மானசி! வைரலாகும் வேற லெவல் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகள் ஏராளம். அவ்வாறு பாடல் திறமையை வெளிப்படுத்தும் வகையில் ஒளிபரப்பாகி மக்களை கவர்ந்த நிகழ்ச்சிதான் சூப்பர் சிங்கர். சீனியர், ஜூனியர் என பல சீசன்களாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
மேலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தற்போது சினிமாதுறையில் பின்னணி பாடகர்களாகவும் வலம் வருகின்றனர. சூப்பர் சிங்கர் சீசன் 8ல் கலந்து கொண்டதன் மூலம் தனது மெல்லிய, வசீகரமான குரலால் அனைவரையும் ஈர்த்து பிரபலமானவர் மானசி. நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று அவர் ஐந்தாவது இடத்தைப் பெற்றார்.
இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வபோது பிரபலமான பாடல்களை பாடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான ராட்சச மாமனே பாடலை அசத்தலாக ஆடியுள்ளார். அதனை கேட்ட ரசிகர்கள் அவரை பாராட்டியுள்ளனர்.