மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
சூப்பர் சிங்கர் ஜூனியர் டைட்டில் வின்னர் இவர்தான்! அடேங்கப்பா.. பரிசு என்ன தெரியுமா??
விஜய் தொலைக்காட்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் திறமையையும் ஊக்குவித்து அவர்களை வாழ்வை முன்னேறச் செய்யும் வகையில் வகையில் ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு அனைவரையும் கவரும் வகையில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். இந்நிலையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குட்டீஸ்கள் அனைவரும் மிகவும் அருமையாக பாடி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தனர். இவ்வாறு அனைவரும் ரசிக்கும் வகையில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 கிராண்ட் பினாலே நேற்று நடைபெற்றது. அதில் விருந்தினராக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கலந்துகொண்டு வெற்றியாளர்களை அறிவித்தார்.
இதில் கிரிஷாங்க் டைட்டில் வின்னர் ஆனார். அவருக்கு 60 லட்சம் ருபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. மேலும் யுவன் இசையில் பாடும் வாய்ப்பும் கிடைத்தது. அதனை தொடர்ந்து ரிஹானா இரண்டாவது இடத்தை பிடித்தார். அவருக்கு ஐந்து லட்சம் தொகை பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மூன்றாம் இடம் பிடித்த நேஹாவுக்கு 3 லட்சம் பணம் மற்றும் 5 சவரன் தங்க காயின் பரிசாக வழங்கப்பட்டது.