சினிமா

பிரபலங்களை பின்னுக்கு தள்ளி, மீண்டும் முதல் இடத்தை பிடித்த சன்னிலியோன்!! எதில் தெரியுமா?

Summary:

Sunny leone got first place in google

பாலிவுட்டில் கவர்ச்சி படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சன்னி லியோன். அதுமட்டுமில்லாமல் இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருக்கும் சன்னி லியோன் தற்போது தமிழ், பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் சன்னி லியோன் தமிழிலும் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் ‘வீரமாதேவி’ என்னும் படத்தில் இளவரசியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் சன்னிலியோன் தற்போது இயக்குனர் ரோஹித் சௌகான் இயக்கத்தில் உருவான அர்ஜூன் பாட்டியாலா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமானது

இந்நிலையில் முதல் வாரம் கூகிளில் அதிகம் தேடப்பட்ட இந்திய பிரபலங்கள் பட்டியலில் சன்னி லியோன் முதலிடத்தில் உள்ளார். 

மேலும் அவரது வாழ்க்கை வரலாற்றுத் தொடரான கரஞ்சித் கவுர், தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன் ஆகியவற்றையே நெட்டிசன்கள் பெருமளவில்  தேடியுள்ளனர்.

 


Advertisement