சினிமா

தமிழ் ரசிகர்களுக்கு செம ட்ரீட், குத்தாட்டம் போடவரும் கவர்ச்சி புயல் சன்னி லியோன்! அதுவும் எந்த ஹீரோவோட பார்த்தீர்களா!

Summary:

தமிழ் சினிமாவில் 80, 90ஸ் காலகட்டத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை பெருமளவி

தமிழ் சினிமாவில் 80, 90ஸ் காலகட்டத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த, நவரச நாயகன் கார்த்திக் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் படம் தீ இவன். இந்த படத்தை ரோஜா மலரே, அடடா என்ன அழகு போன்ற படங்களை இயக்கிய டி.எம் ஜெயமுருகன் இயக்குகிறார்.

இவர் இதற்கு முன் விஜய்சேதுபதியின் சிந்துபாத் படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் கார்த்திக்கிற்கு ஜோடியாக சுகன்யா நடித்துள்ளார். மேலும் அவர்களுடன் ஐஸ்வர்யா லட்சுமி, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தீ இவன் படக்குழு

இந்த முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.  மேலும் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையிலும், மும்பையிலும் நடைபெறஉள்ளது. இந்நிலையில் மும்பையில் நடைபெறவுள்ள ஷூட்டிங்கில் குத்துப் பாடல் ஒன்று படமாக்கபடவுள்ளது. அதில் நடிகர் கார்த்திக்குடன் கவர்ச்சி புயல் சன்னி லியோன் குத்தாட்டம் போடவுள்ளார். சன்னி லியோன்  இதற்கு முன் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியது குறிப்பிடத்தக்கது.  


Advertisement