சினிமா

அடக்கொடுமையே.. சீரியலில் காணாமல்போன சுந்தரி நடிகைக்கு உண்மையிலேயே இப்படியொரு பிரச்சனையா! செம ஷாக்கில் ரசிகர்கள்!!

Summary:

சன் தொலைக்காட்சியில் கிராமத்து கதையில் மக்களை கவரும் வகையில் ஒளிபரப்பாகி வரும் தொடர் சுந்த

சன் தொலைக்காட்சியில் கிராமத்து கதையில் மக்களை கவரும் வகையில் ஒளிபரப்பாகி வரும் தொடர் சுந்தரி.  இத்தொடர் கருப்பாக இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை பற்றியும், அவள் தனது வாழ்வில் சந்திக்கும் சவால்கள், கனவை அடைய மேற்கொள்ளும் போராட்டங்கள் போன்றவற்றை மையப்படுத்தியும் அமைந்துள்ளது.

இந்த தொடரில் சுந்தரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கேப்ரில்லா செல்லுஸ். திருச்சியை பூர்விகமாக கொண்ட இவர், பல்வேறு டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர். மேலும் அவர் 20க்கும் மேற்பட்ட குறும்படங்களிலும்,  நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா படத்திலும், செத்தும் ஆயிரம் பொன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

Gabriella Sellus (Actress) biography, wiki, age, family, husband, movies -  breezemasti

இந்த நிலையில் சில நாட்களாக சுந்தரி தொடரில் அவர் காணாமல் போவது போன்ற காட்சிகள் வந்தது. ஆனால் அவருக்கு உண்மையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாம். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரொம்ப சாதாரணமாக நினைச்சிடாதீங்க. மாஸ்க் போடாமல் வெளியே போகாதீர்கள்.பாதுகாப்பாக இருங்கள். கடைசியாக எனக்கும் கொரோனா உறுதியாகிவிட்டது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டுமென வாழ்த்தி வருகின்றனர்.


Advertisement